தமிழ்நாடு

tamil nadu

அயன் பட பாணியில் ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய 'குருவி' கைது! - Trichy airport GOLD SEIZED

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 12:40 PM IST

Gold Seized: திருச்சி விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைந்து கடத்தி வரப்பட்ட ரூ.70லட்சம் மதிப்புள்ள 977 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையம்

திருச்சி:திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வியட்நாம், தோஹா உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் துபாயில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் பயணிகள் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் மூலம் வந்த பயணி ஒருவரை சோதித்த போது, அவரது ஆசனவாயில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது ஆசனவாயில் மூன்று சிறு பாக்கெட்டுகளாக இருந்த 1081 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், அதை உருக்கி 977 கிராம் தங்கக் கட்டியாகக் கைப்பற்றினர்.

இதன் மதிப்பு 70 லட்சத்து 58 ஆயிரம் என வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், பாம்புகள், உயிரினங்கள் போன்றவற்றை கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை விமான நிலையக் கழிவறையில் இருந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details