தமிழ்நாடு

tamil nadu

திமுகவிற்கு ஏன் ஆதரவு.. முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் கருணாஸ் விளக்கம் என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 11:18 AM IST

Mukkulathor Pulipadai Katchi Leader Karunas Statement: சனானத்தை வீழ்த்தி, சமூக நீதிகாக்க 2024 நாடாளுமன்றத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சே.கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

mukkulathor-pulipadai-katchi-leader-karunas-statement-that-is-supporting-dmk
திமுகவிற்கு ஏன் ஆதரவு.. முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் கருணாஸ் தெரிவிப்பது என்ன?

சென்னை: சனானத்தை வீழ்த்தி, சமூக நீதிகாக்க 2024 நாடாளுமன்றத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தி.மு.க.வை ஆதரிக்கிறது என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சே. கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

karunas-statement

அதில், "பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட நாம் ஒரு குடையின் கீழ் அணியமாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமான இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும்.

மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற மக்கள் ஜனநாயகத்தை மீட்க சமூக நீதியை காக்க இந்தியா கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.

இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில் கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.

தி.மு.க விற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

karunas-statement

மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் 5 முக்கிய கோரிக்கைகள்:

  1. மதுரை விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரைச் சூட்ட ஒென்றிய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
  2. பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவை (அக்டோபர் 30) அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்.
  3. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கள்ளர் - மறவர்- அகமுடையார் ஆகியோரை தேவரினம் என அறிவித்த அரசாணையை நடமுறைப்படுத்தவேண்டும் இரண்டரை கோடி மக்கள் தொகை உள்ள முக்குலத்தோர் சமுதாயத்திற்கு 25% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.
  4. தமிழ்நாட்டில் சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
  5. ஒன்றிய அரசு புதிதாக கட்டியுள்ள பாராளுமன்ற வளாகத்தில் வெள்ளையரை வெளியேற்ற அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..

ABOUT THE AUTHOR

...view details