தமிழ்நாடு

tamil nadu

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் மன்சூர் அலிகான்! - Mansoor Ali Khan discharged

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 10:44 PM IST

Mansoor Ali Khan discharged from hospital: வேலூர் தொகுதி மக்களைப் பார்க்க மருத்துவமனையிலிருந்து மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை மன்சூர் அலிகான் சென்னையிலிருந்து வேலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

mansoor-ali-khan-discharged-from-hospital-in-chennai
மருத்துவர்களின் ஆலோசனையை மீறி டிஸ்சார்ஜ் ஆனாரா மன்சூர் அலிகான்! காரணம் என்ன?

சென்னை: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலுள்ள 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில், நேற்று ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, குடியாத்தம் பகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றுள்ளார்.

அப்போது, மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், உடனடியாக அவரை குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக குடியாத்தத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டார். இந்நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை வந்தடைந்த மன்சூர் அலிகான், சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தரப்பில் இன்று (ஏப்ரல் 18) அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க... குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்... மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatment குடுத்தும் வலி நிக்கல.

அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது.

இவ்வாறாக மன்சூர் அலிகான், தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்" என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது மருத்துவர்களில் அறிவுறுத்தலை மீறி, மன்சூர் அலிகான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் போட்டியிடும், வேலூர் தொகுதி மக்களைப் பார்க்க மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை காலை மன்சூர் அலிகான் சென்னையிலிருந்து வேலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:வாக்களிக்கும் மையத்திற்கு இலவச போக்குவரத்து சேவை.. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு! - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details