தமிழ்நாடு

tamil nadu

திருப்பத்தூரில் பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்… அண்ணாமலை நடைபயணத்தின் போது விபரீதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:58 PM IST

Bjp flag post issue: திருப்பத்தூரில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது அண்ணாமலையை காண வந்த மக்களின் மீது பாஜக கொடிகம்பம் விழுந்ததில் ஒருவர் படுகாயம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்
பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்

பாஜக கொடிகம்பம் விழுந்து ஒருவர் படுகாயம்

திருப்பத்தூர்:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஜன. 31) எண் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அண்ணமலையின் வருகையையொட்டி பாஜக சார்பில் அவரை வரவேற்க திருப்பத்தூர் முதல் ஜோலார்பேட்டை வரை பாஜக கொடி கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், இன்று (ஜன. 31) மதியம் திருப்பத்தூர் - புதுப்பேட்டை கூட்டுச்சாலையில் என் மண் என் மக்கள் நடை பயணம் மேற்கொள்ள அண்ணாமலை வந்தபோது அவரை காண ஏராளமானோர் அங்கு திரண்டனர். அப்பொழுது அங்கு வைக்கப்பட்டு இருந்த 50 அடி நீளமுள்ள கொடிக் கம்பம் ஒன்று திடீரென கீழே விழுந்தது.

இதில் அங்கு நின்றிருந்த ஒருவரின் தலையில் கொடிக் கம்பம் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் ரத்தம் சொட்ட அவரே ஆட்டோவில் ஏறி சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையின் நடைப்பயணத்தின் போது கட்சிக் கொடிக் கம்பம் விழுந்து ஒருவர் பலத்த காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஸ்பெயினின் ரோக்கா நிறுவனம் தமிழகத்தில் ரூ.400 கோடி முதலீடு!

ABOUT THE AUTHOR

...view details