தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் பீர் குடித்த நபர் திடீர் மயக்கம்.. சோதனையில் புழு கிடந்ததால் அதிர்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 4:17 PM IST

Updated : Feb 3, 2024, 4:58 PM IST

Man drank worm infested beer: சாத்தான்குளம் அருகே பீர் பாட்டிலில் தூசி மற்றும் புழு இருந்ததாக, பாதிக்கப்பட்ட நபர் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் பீர் குடித்த நபர் திடீர் மயக்கம்
தூத்துக்குடியில் பீர் குடித்த நபர் திடீர் மயக்கம்

தூத்துக்குடியில் பீர் குடித்த நபர் திடீர் மயக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் சந்தனம் மகன் சண்முகம் (37). கூலித்தொழிலாளியான இவர், குடும்ப நிகழ்வுக்காக முதலூர் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து, முதலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் நேற்று (பிப்.3) மாலை 2 பீர் பாட்டில்கள் வாங்கியுள்ளார்.

அதில் ஒன்றை அவர் குடித்துக் கொண்டிருந்த போது, திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அப்போது உடனடியாக அருகில் இருந்த அவரின் நண்பர்கள், அவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவணையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது மருத்துவர், சண்முகம் குடித்த பீர் பாட்டிலில் மற்றொரு பீர் பாட்டிலை பரிசோதித்தபோது, அதில் புழு மற்றும் தூசி இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சணமுகத்துக்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:தவறான சிகிச்சையால் சிறுவன் உயிரிழந்ததாக புகார்.. அறிக்கை கொடுப்பதில் அரசு மருத்துவமனை அலைக்கழிப்பதாகவும் குற்றச்சாட்டு!

Last Updated :Feb 3, 2024, 4:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details