தமிழ்நாடு

tamil nadu

"கர்நாடகாவில் மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட முடியாது" - அமைச்சர் துரைமுருகன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 10:29 PM IST

Etv Bharat
Etv Bharat

Minister Duraimurugan: கர்நாடகாவில் மேகதாது அணைக்காக நிதி ஒதுக்கி, குழுக்கள் அமைத்தாலும் எந்த காலத்திலும் அணை கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

"கர்நாடகா மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட முடியாது" - அமைச்சர் துரைமுருகன்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏகாம்பரனல்லூர், கொண்டகுப்பம், வசூர், நெல்லிகுப்பம், அகராவரம் ஆகிய பகுதிகளில் 1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி கட்டங்கள் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "வேலூர் பொன்னை ஆற்றில் 20 கோடி மதிப்பீட்டில் சேக் டம் கட்ட அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதேபோல் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாகத் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட 701 பாலங்களைக் கண்டறியப்பட்டு மத்திய அரசின் நிதி உதவியுடன் சரி செய்யப்பட்டு வருகிறது. மேலும் வேலூர் மாவட்டம் சேர்காட்டில் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்தவுடன் விரைவில் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "காவேரி ஆற்றில் மேகதாது அணை கட்டுவதற்காகக் கர்நாடக மாநில அரசு நிதியினை ஒதுக்கலாம். கமிட்டிகளை அமைக்கலாம். வேகமாகப் பேசி வரலாம். ஆனால் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணையை எந்த காலத்திலும் கட்ட முடியாது. அதுதான் சட்டம். அதுதான் நீதி. அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதில் எங்களுக்குக் கவலை இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:இளைஞர்களுக்கு குட் நியூஸ்.. திருச்சியில் புதிய ஐடி பார்க் திறப்பு..!

ABOUT THE AUTHOR

...view details