சென்னை:ஆவடியில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தேர்தல் பறக்கும் படையினரால் அரசுப் பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட 15,000 போதை மாத்திரைகள் சிக்கியது. இந்த கடத்தலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் ஐமன் ஜமால் தலைமையில் தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டு, போதைப் பொருள் கடத்தல் குறித்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, நேற்றிரவு (மார்ச் 18) சந்தேகத்திற்கு இடமாக வந்த இளைஞர்கள் இருவரைப் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று மேற்கொண்ட விசாரணையில், ஆவடி அருகே சோழவரம் பகுதியில் கிருஷ்ணாகாந்த் என்பவரிடம் மாத்திரை வாங்கி வந்ததாகத் தெரிவித்தனர்.