தமிழ்நாடு

tamil nadu

கும்பகோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. சீரமைப்பு பணிகள் தீவிரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 4:59 PM IST

Good train derailed in Kumbakonam: கும்பகோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது
கும்பகோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது

தஞ்சாவூர்: கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக, 21 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில், நான்காவது நடை மேடைக்கு இன்று (பிப்.25) வந்துள்ளது. அப்போது சரக்கு ரயிலில் பொருத்தப்பட்டிருந்த இரு என்ஜின்களில், முன் என்ஜினை பின்னோக்கி இயக்கியபோது, எதிர்பாராத விதமாக முதல் என்ஜினின் மூன்று சக்கரம் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம் புரண்டது.

இதனை அறிந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர், ரயிலை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சரக்கு ரயில் தடத்தில் இவ்விபத்து ஏற்பட்டதால், வழக்கமான பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. தற்போது தடம் புரண்ட ரயில் என்ஜினை தொழில்நுட்ப ஊழியர்கள் உதவியோடு மீட்டு, அதனை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரயில் என்ஜின் தடம் புரண்டதால் கும்பகோணம் குட்ஸ் செட்டில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றும் பணிகள் இன்று தடைப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பள்ளிக்கரணை ஆணவப்படுகொலை; 5 பேர் கைது - சகோதரர் அளித்த பரபரப்பு வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details