தமிழ்நாடு

tamil nadu

மகளுக்கு பாலியல் வன்புணர்வு.. குழந்தை பிறந்த நிலையில் தந்தை போக்சோவில் கைது! - POCSO case in Chennai

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 7:43 PM IST

POCSO case: சென்னையில் மகளை பாலியல் வன்புணர்வு செய்து குழந்தை பிறக்கச் செய்த தந்தையை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு குழந்தை பிறந்த நிலையில், அந்தப் பெண் 17 வயது நிரம்பிய சிறுமி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் உமா மகேஸ்வரி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்துள்ளார்.

அப்போது, 17 வயது சிறுமியை அவரது தந்தையே பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த அந்த குடும்பத்தினர் சென்னையில் வசித்து வந்துள்ளனர். தந்தை, தாய், மகன், மகள் என வசித்து வந்த நிலையில், துணிக்கடை ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர். அந்த துணிக்கடையில் தந்தையுடன் மகளும் இணைந்து பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தான் மகளை பலமுறை தந்தையே பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

மேலும், இதனை தாய் மற்றும் அண்ணனிடம் சொன்னால், அவர்களையும் கொன்று விடுவேன் எனவும் மிரட்டி வந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:உத்தர பிரதேசத்தில் துறவிக்கு அடி உதை - மதுபோதை ஆசாமிகளின் வீடியோ வைரல்! - UP Monk Attack Video

ABOUT THE AUTHOR

...view details