தமிழ்நாடு

tamil nadu

கல்லூரி மாணவர்களுக்கு கிரியேட்டிவ் டிசைன் போட்டி.. மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 9:20 PM IST

Chennai Metro Rail Corporation: "மெட்ரோ ரயிலை பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும், நேரத்தையும் சேமிக்கவும்" என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கான கிரியேட்டிவ் டிசைன் போட்டி ஒன்றைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள பல்வேறு உக்திகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையாண்டு வருகிறது. டிஜிட்டல் டிக்கெட்டில் தள்ளுபடி முதல், 5 ரூபாய் பயணம் வரை பல்வேறு உக்திகளை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து வருகிறது.

அதில், ஒன்றாகக் கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கவும், மெட்ரோ இரயிலைப் பயன்படுத்தவும் - உங்கள் பணத்தையும், நேரத்தையும் சேமிக்கவும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கிரியேட்டிவ் டிசைன் போட்டியை நடத்துகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்ததாவது, கல்லூரி மாணவர்கள் சென்னை மெட்ரோ இரயில் சேவைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவர்களின் ஆக்கப்பூர்வமான வெளிப்பாட்டை ஊக்குவிக்கவும் மற்றும் மேம்படுத்துவதே போட்டியின் நோக்கமாகும்.

இந்த முயற்சி மாணவர் சமூகம் மத்தியில் சென்னை மெட்ரோ இரயில் சேவை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஒரு படியாகும். இது ஒரு வெளிப்படையான போட்டி மற்றும் இதற்கான பதிவு ஆன்லைன் படிவம் மூலம் பதிவு செய்யப்படும். இதற்கான படிவம் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுடன் பகிரப்படும். இந்த போட்டிக்கு வரும் ஜனவரி 23ஆம் தேதி முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.

தகுதி: சென்னையில் உள்ள அனைத்து வழக்கமான இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மட்டுமே.

கருப்பொருள்:USE CMRL - Save Your Money வடிவங்கள்: வீடியோக்கள், அனிமேஷன்கள், ஆடியோ காட்சிகள் அல்லது GIF-கள் (30-60 வினாடிகள்)

பரிசுகள்: முதல் பரிசாக ரூ.15,000, 2வது பரிசாக ரூ.10,000, 3வது பரிசாக ரூ.5,000 வழங்கப்படுகிறது.

பதிவு: ஜனவரி 23, 2024 முதல் பிப்ரவரி 22, 2024 வரை ஆன்லைனில் https://forms.gle/oa3qyGG3kmW2vHn16 இணைப்பில் பதிவு செய்யவும் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் உடனான சந்திப்பு கூட்டம் பிப்ரவரி 29, 2024 நடைபெறும். (விவரங்கள் - சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இணையதளத்தில்).

சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு: மார்ச் 31, 2024.

வெற்றியாளர்கள் அறிவிப்பு: ஏப்ரல் 14, 2024.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு, lmc@cmrl.in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளவும். ("Creative Design Competition for Students" என்ற தலைப்பில் உள்ள மின்னஞ்சல் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் பதில் அனுப்பப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ராமரிடம் மன்னிப்பு.. உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி - அயோத்தி விழாவில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details