தமிழ்நாடு

tamil nadu

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் அஸ்தி கோவை வருகை.. விவசாயிகள் மலர் தூவி மரியாதை! - Shubhkaran Singh

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 11:08 AM IST

Shubhkaran Singh Asthi Kalash yatra: டெல்லி போராட்டத்தில் ஏற்பட்ட தாக்குதலின் போது உயிரிழந்த பஞ்சாப் விவசாயி சுப்கரன் சிங் அஸ்தி கலசம் கோவைக்கு வந்த நிலையில், ஜனநாயக முற்போக்கு அமைப்பு நிர்வாகிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Shubhkaran Singh Asthi Kalash yatra
Shubhkaran Singh Asthi Kalash yatra

கோயம்புத்தூர்:வேளாண் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்ட உத்தரவாதம், பயிா் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப்பில் இருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது, விவசாயிகளை ஹிரியானா அரசு எல்லையிலேயே தடுத்து நிறுத்தியது.

மேலும், பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது, அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கலைத்து வந்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில், 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தாா்.

அதனைத் தொடர்ந்து, விவசாயி சுப்கரன் சிங் மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மரியாதை செலுத்தும் விதமாகவும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில், சுப்ரகன் சிங்கின் அஸ்தி கலசம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வகையில், நேற்று கோவை விமான நிலையம் வந்தடைந்த சுப்ரகன் சிங்கின் அஸ்திக்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் வே.ஆறுச்சாமி, தமிழ் புலிகள் கட்சியின் இளவேனில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, 2 நாட்கள் அஞ்சலி செலுத்துவதகாக கோவையில் வைக்கப்படுவதாகவும், பின்னர் கார் மூலம் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் - மீட்பு பணி தீவிரம்! - Boy Fell Borewell At Karnataka

ABOUT THE AUTHOR

...view details