தமிழ்நாடு

tamil nadu

ரூ.4 கோடி விவகாரம்; மூன்று பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு! - RS 4 Crore Seized Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 29, 2024, 3:40 PM IST

RS.4 Crore Seized Case: தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ.4 கோடி வழக்கு தொடர்பாக, மூன்று பேரின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் நேற்று சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், இன்று சிபிசிஐடி போலீசார் மூன்று பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

RS.4 Crore Seized Case
RS.4 Crore Seized Case

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி வழக்கு தொடர்பாக, மூன்று பேரின் வாக்குமூலம், அதன் வீடியோ காட்சிகள் மற்றும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாம்பரம் போலீசார் நேற்று(ஏப்.28) சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணத்துடன் பிடிபட்ட மூன்று நபர்கள் மீதும் நான்கு பிரிவின் கீழ் இன்று(ஏப்.29)வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், பணத்தைக் கொண்டு சென்ற மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க வேண்டுமெனத் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது உறவினர்கள், அவரது அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் ஆகியோருக்கு தாம்பரம் காவல் நிலையத்திலிருந்து சம்மன் அளிக்கப்பட்டது.

அந்தவகையில், ஏப்ரல் 22ஆம் தேதி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆஜராக இருந்த நிலையில், நயினார் நாகேந்திரன் தரப்பில் 10 நாட்கள் கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, மே 2ஆம் தேதி ஆஜராகும் படி அவருக்கு இரண்டாவது முறை சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய அவரது உறவினர் முருகன் என்பவரும், அலுவலகத்தில் பணிபுரியும் ஜெய்சங்கர் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் கடந்த ஏப்.24ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இதையும் படிங்க:மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கஞ்சா பொட்டலத்துடன் மனு அளிக்க வந்த பாஜக நிர்வாகி! - BJP Executive Petition To Mk Stalin

ABOUT THE AUTHOR

...view details