மதுரை:விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பாக, அன்னமயில் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கரோனா நோய் தொற்று காலத்தில் தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முன்கள பணியாளர்களாகப் பணி செய்து வந்தனர்.
2021ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அன்று தமிழக அரசு பிறப்பித்திருந்த அரசாணையை ஒன்றில், 2021 கரோனா நோய்த் தொற்று உச்சநிலையிலிருந்த காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால், இன்றுவரை அந்த அரசாணையின் அடிப்படையில், தூய்மைப் பணியாளர்கள் யாருக்கும் ஊக்கத்தொகை 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை. இதனை வழங்கக் கோரி அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.