தமிழ்நாடு

tamil nadu

இனி வீட்டில் இருந்தே புறநகர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.! - how to book local train tickets

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 25, 2024, 6:33 PM IST

Updated : Apr 26, 2024, 2:26 PM IST

நீண்ட வரிசையில் காத்திருக்காமல் வீட்டில் இருந்தபடியே புறநகர், எம்.ஆர்.டி.எஸ் (MRTS) மற்றும் நடைமேடை (platform) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்ற, தகவலை தெற்கு ரயில்வே தனது எக்ஸ்(X) பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

ரயில்
ரயில்

சென்னை: ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்டர்களில் இருக்கும் பெரிய கூட்த்தைப் பார்த்து மலைத்துப் போகிறீர்களா? உங்களுக்காகவே UTS செயலி முலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் முறையில் சில மாற்றங்களை செய்து எளிமையாக்கியுள்ளது, தெற்கு ரயில்வே.

தமிழ்நாடு முழுவதும் லோக்கல் ரயில்கள் மற்றும் சென்னையின் புறநகர், MRTS ரயில் பயணிகள் இனி வீட்டில் இருந்தபடியே பயணச்சீட்டு மற்றும் நடைமேடை (platform) டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். இது தொடர்பான தகவலை தனது எக்ஸ்(X) வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள தெற்கு ரயில்வே, இதனால் பயணிகள் சிறந்த வகையில் பலனடைய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

யூடிஎஸ் (UTS) என்ற செயலி மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது ஏற்கனவே இருந்த ஒரு திட்டம்தான். ஆனால், இதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன.

UTS பழைய கட்டுப்பாடுகள்

  • பயணிகள் வீட்டிலோ ரயில் நிலையத்தினுள்ளோ இருந்தால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
  • ரயில்நிலையத்திலிருந்து குறிப்பிட்ட மீட்டர் தொலைவிற்குள் இருந்தால் தான் புக்கிங் செய்ய முடியும் என்ற எல்லை இருந்தது.

UTS புதிய விதிகள்

  • டிக்கெட் புக் செய்வதற்கான தொலைவு கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் புக்கிங் செய்து கொள்ளலாம்.
  • ஆனால் புக்கிங் செய்த அடுத்த 2 மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை சென்றடைய வேண்டும்.
  • ரயில் நிலையத்திற்கு உள்ளிருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது என்ற கட்டுப்பாடு தொடர்கிறது.

இந்த புதிய தளர்வுகள் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படிங்க:படுக்கைக்குச் சென்றும் தூக்கம் வரவில்லையா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா? - What To Do To Fall Asleep

Last Updated :Apr 26, 2024, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details