தமிழ்நாடு

tamil nadu

காஷ்மீர் கிரிக்கெட் பேட் ஆலையில் திடீரென பார்வையிட்ட சச்சின் டெண்டுல்கர் - வைரலாகும் வீடியோ..!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 6:40 PM IST

Sachin Tendulkar visit Kashmir Cricket Bat Factory: காஷ்மீரில் உள்ள எம்ஜே ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலையை சச்சின் டெண்டுல்கர் பார்வையிட்டதை அடுத்து பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன் லோனை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

காஷ்மீர் பேட் ஆலையில் திடீரென பார்வையிட்ட சச்சின் டெண்டுல்கர்.. வைரலாகும் வீடியோ!

ஸ்ரீநகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் ஜாம்பாவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று (பிப்.17) ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர் புல்வாமா மாவட்டம், செர்சூ பகுதியில் உள்ள கிரிக்கெட் பேட் தயாரிக்கும் எம்ஜே ஸ்போர்ட்ஸ் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிட்டார்.

அதோடு அங்கு உள்ள தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். மேலும், இந்த உரையாடலின் போது சச்சின் டெண்டுல்கர் வீரர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் செயல்திறனில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சச்சின் டெண்டுல்கருடன் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் மற்றும் மகள் சாரா டெண்டுல்கர் இருந்தனர்.

இதற்கிடையில் சச்சின் டெண்டுல்கர், பாரா கிரிக்கெட் வீரர் அமீர் ஹுசைன் லோனை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் தனது கைகளை இழந்த அமீர் கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் தோள்பட்டை இடையே பேட்டிங் செய்தும், காலில் பந்து வீசியும், பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தவர்.

இவரைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் கடந்த 12ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் "அமீர் சாதியமில்லாததைச் சாத்தியமாக்கிக் காட்டியுள்ளார். இது விளையாட்டின் மீது அவருக்கு உள்ள அன்பையும், அர்ப்பணிப்பையுமே காட்டுகிறது.

ஒரு நாள் அவரை சந்தித்து அவர் பெயர் பொரிக்கப்பட்ட ஜெர்சியை பெறுவேன் என்று நம்புகிறேன். இவரது செயல்பாடு விளையாட்டின் மேல் ஆர்வமுள்ள கோடிக் கணக்கானவர்களை ஊக்கவிக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தோள்பட்டையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்… காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details