தமிழ்நாடு

tamil nadu

தொழில் மோசடி: ஹர்திக், க்ருணால் பாண்டியா சகோதரர் கைது! - Hardik pandya brother arrest

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 11, 2024, 7:53 PM IST

பண மோசடி வழக்கில் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா அளித்த புகாரில் அவர்களது சகோதரரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

மும்பை :இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியாவின் சகோதரர் வைபவ் பாண்டியா, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 4 கோடி ரூபாய் மோசடி செய்த காரணத்துக்காக அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை நகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவினர் கடந்த ஏப்ரகல் 8ஆம் தேதி 37 வயதான வைபவ் பாண்டியாவை நம்பிக்கை மோசடி, மிரட்டல், சதி மற்றும் அது சார்ந்த பிற பிரிவுகளின் கீழ் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.

ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா உள்ளிட்ட மூன்று சகோதரர்களும் இணைந்து தொடங்கிய தொழில் நிறுவனத்தில் வைபவ் பாண்டியா இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு சகோதரர்கள் மூவரும் இணைந்து தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.

அதில் ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா தலா 40 சதவீதம் முதலீடு செய்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீதத்தை வைபவ் பாண்டியா முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொழிலை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வைபவ் பண்டியா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. லாபத்தை மூவரும் பிரித்துக் கொள்வது என முடிவு செய்து உள்ளனர்.

இந்த நிலையில், ஹர்திக் மற்றும் க்ருணாலுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் அதே தொழிலை வேறு ஒரு தனி நிறுவனமாக வைபவ் நிறுவியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ஒப்பந்தத்தை மீறி அவர் செயல்பட்டுள்ளார். வைபவ் பாண்டியா தொடங்கிய புதிய நிறுவனத்தால் மூவரும் இணைந்து தொடங்கிய நிறுவனம் நஷ்டமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நேரடியாக 3 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு இதே காலகட்டத்தில் வைபவ் தனியாக தொடங்கிய நிறுவனத்தின் லாபம் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும், ஜாயிண்ட் வங்கிக் கணக்கில் இருந்த 1 கோடி ரூபாயை தனது பெயரில் உள்ள கணக்குக்கு வைபவ் மாற்றியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா கேட்ட போது இருவரது பெயருக்கும் களங்கம் விளைவிப்பேன் என வைபவ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஹர்திக் மற்றும் க்ருணால் பாண்டியா போலீசில் புகார் அளித்து உள்ளனர். அந்த வழக்கில் வைபவ் பாண்டியாவை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :MI Vs RCB: டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு! - IPL 2024 Match Highlights

ABOUT THE AUTHOR

...view details