தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கிளிக்ஸ்! - MADURAI MEENAKSHI THIRUKALYANAM

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 21, 2024, 8:00 PM IST

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும், சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்தாண்டு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 10ஆம் நாள் நிகழ்வான இன்று, மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
தேய்வீகக் காட்சி அளிக்கும் மதுரை மீனாட்சி
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மேள தாளங்கள் முழங்க நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வு
தேய்வீகக் காட்சி அளிக்கும் மதுரை சுந்தரேஸ்வரர்
மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது
திருக்கல்யாண மேடையில் மீனாட்சியம்மனின் வலது புறம் பவளகனிவாய் பெருமாளும், சுந்தரேசுவரரின் இடது புறம் சுப்ரமணியசுவாமி தெய்வானையுடனும் எழுந்தருளினர்
வேதமந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டுதிருக்கல்யாணம் நடைபெற்றது

ABOUT THE AUTHOR

...view details