தமிழ்நாடு

tamil nadu

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தான் - சட்டவிரோத செல்போன் டவர்கள் அமைப்பு! என்ன காரணம்?

By PTI

Published : Feb 18, 2024, 5:35 PM IST

இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் ஊடுருவ ஏதுவாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் டெலிகாம் டவர்கள் நடப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

ஜம்மு காஷ்மீர் : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான எல்லை பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் புகுந்து நாசவேளைகளில் ஈடுபட தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அதேநேரம் இரவு பகலாக எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சதிதிட்டங்களை தவிடு பொடியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே சட்ட விரோதமாக டெலிகாம் டவர்களை பாகிஸ்தான் அமைத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத ஊடுருவல்கள் அதிகரிக்க வழிவகுக்க உதவும் வகையில் அதீத தொழில்திறன் கொண்ட டவர்கள் அண்மைக்காலமாக நிறுவப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அண்மைக்காலமாக தீவிரவாத அமைப்புகள் அதிக தொழில்திறன் மற்றும் பாதுகாப்பு தன்மை மிக்க YSMS சேவைகளை பயன்படுத்தி வருவதாக ராணுவம் தரப்பி தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி ஊடுருவல்களில் ஈடுபடும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் இந்த YSMS குறுந்தகவல் பகிர்வு சேவையை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் வரும் டெலிகாம் சிக்னல்கள் ராணுவத்தின் ரேடாரில் சிக்காமல் பயங்கரவாதிகள் தப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், ஜம்மு பிராந்தியத்தில் ஊடுருவும் குழு உள்ளிட்டவைகளின் தொலைத்தொடர்பு நெட்வொர்க்கில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

மேலும், பாகிஸ்தானுடனான எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள ராணுவம் அல்லது எல்லை பாதுகாப்பு படையினர் மூலம் கண்டுப்பிடிக்கப்படுவதைத் தவிர்க்க செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொலைத்தொடர்பு சிக்னல்களை அதிகரிப்பதற்கான திட்டம், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயுடன் இணைந்து மேற்கொள்ளப்படுவதாகவும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் உமர் அஹ்மத் ஷா தலைமையிலான சிறப்பு தொடர்பு அமைப்பு இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

ஏற்கனவே பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகளை தீர்க்க இந்திய ராணுவ அதிகாரிகள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பாஜகவில் இணையும் கமல்நாத்? தகுதி நீக்கம் செய்ய முடியாதா! சட்ட நிபுணர்கள் கூறும் சிக்கல்கள் என்ன?

ABOUT THE AUTHOR

...view details