தமிழ்நாடு

tamil nadu

அமெரிக்காவில் இந்திய மாணவர் பலி! ஒரு வாரத்தில் 2வது சம்பவம்! தொடரும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை! மத்திய அரசின் நடவடிக்கை என்ன? - Indian Student dies in US

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 9, 2024, 12:26 PM IST

அமெரிக்காவில் கடந்த மாதம் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இந்த வாரத்தில் அமெரிக்காவில் உயிரிழக்கும் இந்தியர்களில் 2வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டில் இதுவரை 11 இந்தியர்களில் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

File Picture
File Picture

நியூ யார்க் :தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த நச்சராம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அப்துல் அர்பாத். அமெரிக்காவில் ஒஹியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் ஐடி முதுகலை படித்து வந்து உள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி ரிசர்வ் சதுக்கம் பகுதியில் உள்ள தன் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அப்துல் அர்பாத், மீண்டும் திரும்பவில்லை.

இதுகுறிது கிளீவ்லேண்ட் போலீசார் காணாமல் போனவர்களுக்காக வழங்கப்படும் எச்சரிக்கை கொடுத்து தேடி வந்து உள்ளனர். மேலும், முகமது அப்துல் அர்பாத் காணாமல் போன தகவல் குறித்து ஐதராபாத்தில் உள்ள அவரது தந்தைக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி முகமது அப்துல் அர்பாத்தின் தந்தை சலீமுக்கு மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்து உள்ளது.

அதில் பேசிய மர்ம நபர், போதைப் பொருள் கடத்தல் கும்பலால் அர்பாத் கடத்தப்பட்டு உள்ளதாகவும், ஆயிரத்து 200 அமெரிக்கா டாலர் பணம் வழங்கினால் அர்பாத்தை விட்டுவிடுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பணம் தரவில்லை என்றால் அர்பாத்திடம் கிட்னியை அறுத்து விற்றுவிடுவதாக கூறி மர்ம நபர் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

அதேநேரம் மர்ம நபர் எப்படி பணத்தை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கவில்லை என்றும், அர்பாத்திடம் பேச வேண்டும் என கேட்ட போது அனுமதிக்கவில்லை என்றும் சலீம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் சிக்கி உள்ள தனது மகனை மீட்டுத் தரக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்தை, அர்பாத்தின் தந்தை சலீம் நாடி உள்ளார்.

இந்திய தூதரகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ஆகியோருக்கு கடிதம் மூலம் தனது மகனை மீட்டுத் தரக்கோரி கோரிக்கை விடுத்து உள்ளார். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பின் முகமது அப்துல் அர்பாத் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் காணாமல் போன இந்திய மாணவர் சடலமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.

அர்பாத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், அவரது உடல் இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம் என்று தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் இந்திய கொல்லப்படுவது வாரத்தில் 2வது சம்பவம் ஆகும்.

மொத்தமாக நடப்பாண்டில் இதுவரை 11 இந்தியர்கள் பல்வேறு சூழல்கள் மற்றும் காரணங்களால் அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இதே ஒஹியோ மாகாணத்தில் இந்திய மாணவர் உமா சத்ய சாய் கடே என்பவர் கொல்லப்பட்டார். கடந்த மாதம் கொல்கத்தாவை சேர்ந்த இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ் மிஸ்ஸோரி பகுதியில் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார்.

அதற்கு முன்னதாக போஸ்டனில் 20 வயதான இந்திய இளைஞர் அபிஜீத் பருசூரு கொல்லப்பட்டது குறிப்பிடத்தகக்து. இப்படி கடந்த 4 மாதங்களில் மட்டும் 11 இந்தியர்கள், அமெரிக்காவில் கொல்லப்பட்டு உள்ளனர். என்ன காரணத்திற்காக இந்தியர்கள் கொல்லப்படுகிறார்கள், இதில் ஏதும் சதித் திட்டம் உள்ளதா என மத்திய வெளியுறவு அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க :இந்திய தேசியக் கொடி அவமதிப்பு விவகாரம்: மாலத்தீவு முன்னாள் அமைச்சர் பகிரங்க மன்னிப்பு! - Maldives Minister Apologise

ABOUT THE AUTHOR

...view details