தமிழ்நாடு

tamil nadu

உங்கள் குழந்தைக்கான பள்ளியை எப்படித் தேர்வு செய்வீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள்! - Healthy Schooling strong Foundation

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 6:05 PM IST

School for Health Foundation: கட்டமைக்கப்பட்ட பாடத் திட்டத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் என்பது ஒரு குழந்தையின் எதிர்கால வாழ்க்கைக்குச் சிறந்த அடித்தளமாக இருக்கும் என, PHFI பொதுச் சுகாதாரத்தைச் சேர்ந்த பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறியுள்ளார்.

schooling-for-health-foundation-for-the-future
உங்கள் குழந்தைக்கான பள்ளியை எப்படித் தேர்வு செய்வீர்கள்? தெரிந்து கொள்ளுங்கள்!

சென்னை:ஒரு மனிதனின் ஒட்டு மொத்த வாழ்க்கையில் விலை மதிப்பற்ற சொத்தாக இருப்பது என்னவென்றால் அது அவனின் ஆரோக்கியமாக மட்டும்தான் இருக்க முடியும் என ஆரம்பிக்கும் பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டியின் கட்டுரை, மாணவர்களின் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை விளக்கியபடி முடிகிறது.

பள்ளிக்கூடங்கள் பொதுவாக ஒரு குழந்தையின் கல்வி, ஒழுக்கம், எதிர்காலம் உள்ளிட்டவற்றை வளர்த்தெடுக்கும் இடமாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த சமூகத்தை வழிநடத்தவும், வடிவமைக்கவும், பாதுகாக்கவும் கூடிய பொறுப்புள்ள குடிமக்களாக மாணவர்களை உருவாக்கி எடுக்கிறது. இவை அனைத்தும் சரியாக நடைபெற வேண்டும் என்றால் அந்த குழந்தைக்குச் சிறந்த ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது பள்ளிகள் மற்றும் சமூகத்தின் பொறுப்பாக உள்ளது.

பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும்:

  • தூய்மை மற்றும் பசுமையான சுற்றுப்புறம்
  • காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் நிறைந்த வகுப்பறை
  • விளையாட்டு மைதானம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உட்கட்டமைப்பு வசதி
  • ஆரோக்கியமான சிற்றுண்டியும்
  • யோகா மற்றும் தியானப் பயிற்சி வகுப்புகள்
  • செவிலியர் பணியில் அமர்த்தப்பட்டிருத்தல்

ஆரோக்கியமான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன இருக்க வேண்டும்:

  • போதைப் பொருட்களுக்கு எதிரான கடுமையான வழிநடத்தல்: போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வுடன் கல்வி பயிலும் குழந்தைகள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், தங்கள் குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் மாற்றத்திற்காகப் போராடும் வலியவர்களாக வளர்த்தெடுக்கப்படுவார்கள்.
  • சுகாதார கருத்தரங்கை மாணவர்களிடம் மேற்கொள்ளுதல்: ஆரோக்கியம், சுகாதாரம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களிடம் கருத்துக்களைக் கேட்டு, பகிர்ந்துகொள்ளும்போது அதைப் பேணுவதிலும், பாதுகாப்பதிலும், கடைப்பிடிப்பதிலும் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
  • மனம் மற்றும் உடல்நல சவால்களை எதிர்கொள்ள மாணவர்களுக்கான குழுக்களை அமைத்தல்:மாணவர்கள் தங்களுக்கு உள்ளேயான மனம் மற்றும் உடல் நலன் குறித்து தங்கள் நண்பர்களிடம் பேசும்போதும், தெரியப்படுத்தும்போது அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவு பெறுவதுடன். கூட்டாய்மையை வளர்த்தெடுக்கவும், பாகுபாடு, பிரிவினை இன்றி சமத்துவம் போற்றவும் கற்றுக்கொள்வார்கள்.
  • ஆசிரியர்களுக்கு முதலுதவி மேற்கொள்வதற்கான பயிற்சி வழங்குதல்: பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஏதேனும் விபரீதம் ஏற்படும்போது முதலுதவி வழங்கவும், பெண் குழந்தைகளுக்கான மாதவிடாய் பிரச்சனைகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கவும் ஆசியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவை அனைத்தும் உள்ளடக்கியதுதான் பள்ளியாக இருக்க வேண்டும். ஒரு குழந்தை தங்கு தடையின்றி கல்வி கற்க அந்த குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் என்பது இன்றியமையாதது. கட்டமைக்கப்பட்ட பாடத் திட்டத்துடன், ஒழுங்கமைக்கப்பட்ட கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தையினுடைய எதிர்கால வாழ்க்கைக்குச் சிறந்த அடித்தளமாக இருக்கும். இதனால் அந்த குழந்தையின் குடும்பம் மட்டும் இன்றி சமூகம் மற்றும் ஒட்டு மொத்த நாட்டின் ஆரோக்கியமும், கல்வியும் மேம்படும். கல்வியுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விளையாட்டு உள்ளிட்ட அனைத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட கற்றலாக அமைய வேண்டும் என அந்த கட்டுரையில் பேராசிரியர் கே. ஸ்ரீநாத் ரெட்டி விளக்கிக்கூறியுள்ளார்.

இதையும் படிங்க:கோல்டன் க்ரிஸ்பி கார்ன் எப்படி பக்காவா ரெடி பண்றது..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.! - How To Make Crispy Corn Recipe

ABOUT THE AUTHOR

...view details