தமிழ்நாடு

tamil nadu

கோல்டன் க்ரிஸ்பி கார்ன் எப்படி பக்காவா ரெடி பண்றது..? இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க.! - How to make crispy corn recipe

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 12, 2024, 1:08 PM IST

Updated : Apr 12, 2024, 4:07 PM IST

குழந்தைகளுக்கான ஈவ்னிங் டைம் ஸ்னேக்ஸ் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இந்த கோல்டன் க்ரிஸ்பி கார்ன் செய்துகொடுங்கள்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: கோடை விடுமுறை விட்டாச்சு, வீட்டில் விளையாடும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் தயாரித்துக் கொடுக்க வேண்டும். "அம்மா நல்ல ஸ்பைசியா, மொறுமொறுன்னு ஸ்னாக்ஸ் பண்ணி குடு" எனக் கேட்கும் குழந்தைகளுக்கு இந்த கோல்டன் க்ரிஸ்பி கார்ன் ரெசிப்பியை செய்து கொடுங்கள். கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் சட்டெனச் சாப்பிட்டு விடுவார்கள்.

அது மட்டும் இன்றி கார்ன் (corn) மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவு. இதை உட்கொள்வதால் உங்களுக்கும் சரி, உங்கள் குழந்தைகளுக்கும் சரி செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் மேம்படும். கண்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம் அளிக்கும், இதயத்தைப் பாதுகாப்பதுடன் நீங்கள் நன்றாக வேலை செய்யவும், குழந்தைகள் ஓடி ஆடி விளையாடத் தேவையான ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்களை தரும்.

இந்த கோல்டன் க்ரிஸ்பி கார்ன் (golden crispy corn) தயாரிக்கத் தேவையானப் பொருட்கள்;

  • கார்ன்: 100 கிராம்
  • மைதா : 1 டீ ஸ்பூன்
  • கார்ன் ஃப்ளார்: 1 டீ ஸ்பூன்
  • அரசிப் பொடி: 1 டீ ஸ்பூன்
  • இடித்த பூண்டு: 1 1/2 டீ ஸ்பூன்
  • மிளகாய் பொடி : 1/4 டீ ஸ்பூன்
  • மிளகு : 1/4 டீ ஸ்பூன்
  • உப்பு : தேவைக்கு ஏற்ப
  • சோயா சாஸ்: 1 டீ ஸ்பூன்
  • கொத்தமல்லி: சிறிதளவு
  • சர்க்கரை: 1/4 டீ ஸ்பூன்
  • எண்ணெய்
  • நைசாக வெட்டப்பட்ட பெரிய வெங்காயம் : 1 கப்
  • கிடைத்தால் ரெட் அண்ட் க்ரீன் கேப்சிகம் : 1/2 கப்
  • கிடைத்தால் மட்டும் celery leaf மற்றும் spring onion

செய்முறை:முதலில் கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கழுவி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மைதா, கார்ன் ஃப்ளார், அரசிப் பொடி ஆகியவை போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பிறகு ஒரு பொறிக்கப் பயன்படுத்தும் தவாவை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றி நன்றாகக் காய வையுங்கள். பிறகு அதில், அந்த கார்னை கொட்டி லைட்டாக அதிகபட்சம் 2 நிமிடம் பொறித்து அந்த கார்னை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு, மற்றொரு தவாவை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி, அதில் நைசாக நறுக்கி வைத்த celery leaf- பை போடுங்கள். பிறகு பூண்டை போடுங்கள். இரண்டும் நன்றாக வறுபட வேண்டும், அதனைத் தொடர்ந்து நைசாக வெட்டப்பட்ட பெரிய வெங்காயத்தைப் போட வேண்டும். பிறகு ரெட் அண்ட் க்ரீன் கேப்சிகம் போட வேண்டும், பிறகு மிளகாய் பொடி , மிளகு , உப்பு அனைத்தையும் போட்டு நன்றாகக் கிளரவும்.

பிறகு அதில் வருத்து வைத்த கார்னை கொட்டி நன்றாகக் கிளர வேண்டும். கூடவே சோயா சாஸ் ஊற்றி அதனுடன் லைட்டாக சர்க்கரை, கடைசியாக ஸ்ப்ரிங் ஆனியனைப் போட்டு லைட்டாக ஒரு பிரட்டு பிரட்டி எடுத்து ப்ளேட்டில் போட்டு குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டியதுதான்.

இதையும் படிங்க:"மசாலா டீ" இப்படி தயாரிச்சு ட்ரை பண்ணி பாருங்க.! - How To Prepare Good Masala Tea

Last Updated : Apr 12, 2024, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details