தமிழ்நாடு

tamil nadu

மாஸ் காட்டும் சூர்யாவின் 'கங்குவா' டீசர்.. மூன்று நாட்களில் 2 கோடி பார்வையாளர்கள்! - kanguva teaser

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 23, 2024, 5:39 PM IST

KANGUVA TEASER
KANGUVA TEASER

Kanguva Sizzle Teaser: சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து திரைக்கு விரைவில் வரவுள்ள 'கங்குவா' படத்தின் டீசர் வெளியான மூன்று நாட்களில் 1.8 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

சென்னை:மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் என படக்குழு தரப்பில் தெரிவித்துள்ளது.

நடிகர் சூர்யா மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான 3 நாட்களில், 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் தயாரித்திருக்க, நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:உதய் கார்த்திக்கின் 'ஃபேமிலி படம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! - Family Padam Movie

ABOUT THE AUTHOR

...view details