தமிழ்நாடு

tamil nadu

லெஜண்ட் சரவணனை இயக்கும் தனுஷ் பட இயக்குநர்? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 24, 2024, 10:13 AM IST

Legend Saravanan second film update: லெஜண்ட் சரவணன் தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்கும் என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

legend saravanan second film update
லெஜண்ட் சரவணன்

சென்னை: தமிழகத்தின் முக்கிய தொழிலதிபராக இருப்பவர் லெஜண்ட் சரவணன். தான் நடத்தி வரும் துணிக்கடைகளுக்காக விளம்பரப் படங்களில் நடித்தவர், அதன்பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு 'தி லெஜண்ட்' என்ற படத்தில் நடித்தார். இப்படத்தை அஜித் நடித்த உல்லாசம் படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். இப்படம் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தனது அடுத்த படத்துக்கான இயக்குநர் தேடலில் இருந்த அவர், தற்போது தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமீபத்தில், தனது உறவினர் திருமணத்தில் கலந்து கொண்ட லெஜண்ட் சரவணன், தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இயக்குநர் துரை செந்தில்குமார் லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், லெஜண்ட் சரவணன் படம் எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும், லெஜண்ட் சரவணனை எப்படி மாற்றப் போகிறார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக, இயக்குநர் துரை செந்தில்குமார் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல், தனுஷ் நடித்த கொடி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது கருடன் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details