டெல்லி :முன்னாள் துணை பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான எல்.கே அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். டெல்லியில் உள்ள எல்.கே அத்வானியின் வீட்டில் அவருக்கு பாரத் ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த ஆண்டு 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதில் நேற்று (மார்ச்.30) தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் 4 பேருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருதினை வழங்கினார்.
முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங், தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன், இரண்டு முறை பீகார் முதலமைச்சராக இருந்த கர்ப்பூரி தாகூர் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தார். முன்னாள் பிரதமர் பிவி நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட பாரத ரத்னா விருதை அவரது மகன் பிவி பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார்.