தமிழ்நாடு

tamil nadu

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்.. ராட்சத போர்டு விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு! - Mumbai Bill Board Collapse

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 8:31 PM IST

Mumbai Hoarding Board Collapses Issue: மும்பையில் கடும் புழுதிப் புயல் மற்றும் கனமழை காரணமாக நேற்று ராட்சத இரும்பு பில் போர்டு விழுந்த விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது.

Mumbai Hoarding Board Collapses
Mumbai Hoarding Board Collapses (Photos Credits to ETV Bharat Tamil Nadu)

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று கடுமையான புழுதிப் புயல் வீசியது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் மும்பை, காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ராட்சத இரும்பு பில் போர்டு ஒன்று திடீரென முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் அங்கிருந்த 100-க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக நேற்று இந்த கோர விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்ததாகவும், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ராட்சத இரும்பு பில் போர்டுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 60-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த விபத்தில் ராட்சத பில் போர்டுக்கு அடியில் சிக்கிக் கொண்ட 67 பேர் இதுவரை மீட்கப்பட்டு உள்ளதாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாவும் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களைக் கொண்டு ராட்சத பில் போர்டை அகற்றும் பணி நடைபெற்றது.

இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று வரை ராட்சத பில் போர்டு விழுந்தில் பலி எண்ணிக்கை 4 பேராக இருந்த நிலையில், தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒருவர் படுகாயங்களுடனும் மற்றும் 43 பேர் சிறிய காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருவதாகவும், 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று சம்பவ இடத்தில் மகாரஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆய்வு செய்தார். தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மீட்பு பணிகள் குறித்து அவர்களிடம் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கேட்டறிந்தார்.

இதையும் படிங்க:ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! - HD Revanna Got Bail

ABOUT THE AUTHOR

...view details