ETV Bharat / bharat

ஆள்கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன் - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! - HD Revanna Got Bail

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:17 PM IST

ஆள் கடத்தல் வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ எச்.டி ரேவண்ணாவுக்கு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

Etv Bharat
HD Revanna (Photo Credit: IANS Photo)

பெங்களூரூ: கர்நாடக மாநிலம் ஹசன் மக்களவை தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ எச்.டி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 4ஆம் தேதி எச்.டி ரேவண்ணா ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யபப்ட்ட நிலையில், ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், இந்த மனு எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (மே.13) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி, ஆள் கடத்தல் வழக்கில் எச்.டி ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எச்.டி ரேவண்ணாவுக்கு எதிரான பெங்களூரு கே.ஆர் நகர் காவல் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடையதாக ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஆபாச வீடியோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரணைக்கு ஆஜராகாமல் தடுக்க கடத்தியதாக பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹோலேநரசிபூர் எம்.எல்.ஏ, எச்.டி ரேவண்ணா தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இதையடுத்து, கடந்த மே 4ஆம் தெதி எச்.டி ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எச்.டி ரேவண்ணாவை 4 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே எச்.டி ரேவண்ணாவின் நீதிமன்ற காவலை மே 14ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நாளை (மே.14) ரேவண்ணாவின் நீதிமன்ற காவல் நிறைவடைய இருந்த நிலையில், ஆள்கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி எச்.டி ரேவண்ணா எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை எச்.டி ரேவண்ணாவுக்கு வழங்கினார். மேலும், எச்.டி ரேவண்ணா இரண்டு பேர் பிணை கையெழுத்து மற்றும் 5 லட்ச ரூபாய்க்கான பிணை பத்திரம் வழங்க உத்தரவிட்டு நீதிபதி ஜாமீன் வழங்கினார். பெரும்பாலும், நாளை (மே.13) எச்.டி ரேவண்ணா ஜாமீனில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 4வது கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு: 3 மணி நிலவரப்படி 52.60% வாக்குகள் பதிவு! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.