தமிழ்நாடு

tamil nadu

குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்தரின் திடீர் மரணம்; அமைச்சர் க.ராமச்சந்திரன் நேரில் அஞ்சலி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 3, 2024, 11:00 AM IST

Coonoor Municipality chairman death: நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர் மன்றத் தலைவர் ஷீலா கேத்தரின்(68) மாரடைப்பால் காலமானார். சுற்றுலாத் துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

காலமான ஷீலா கேத்தரின் புகைப்படம்
காலமான ஷீலா கேத்தரின் புகைப்படம்

குன்னூர்:நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர் மன்ற தலைவர் ஷீலா கேத்தரின் (68) மாரடைப்பு காரணமாக நேற்று(பிப்.02) காலமானார். குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது.

குன்னூர் அட்டடி பகுதியைச் சேர்ந்த ஷீலா கேத்தரின் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் உறுப்பினராக இருந்தவர். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அட்டடி பகுதி கவுன்சிலராகவும் இருந்துள்ளார். திமுக பொதுக் குழு உறுப்பினராக உள்ள இவர் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது திமுக சார்பில் குன்னூர் நகர் மன்ற தலைவர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிர் பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, மாரடைப்பால் உயிரிழந்த ஷீலா கேத்ரின் உடலுக்கு மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான க.ராமச்சந்திரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "02-02-024 கழக பொதுக்குழு உறுப்பினாரும், குன்னூர் நகரமன்ற தலைவருமான அன்பு சகோதரி ஷீலா கேத்ரின் அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியது அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர் பகுதி மக்கள் கழகத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கழக நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்தினோம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தோடர் பழங்குடியின மக்களின் உப்பட்டும் திருவிழா.. பாரம்பரிய ஆடையுடன் வழிபட்ட மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details