தமிழ்நாடு

tamil nadu

உபா, பணமோசடி தடுப்பு சட்டங்கள் ரத்து - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேர்தல் அறிக்கை வெளியீடு! - CPIM Lok Sabha Poll Manifesto

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 5:34 PM IST

சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தடுப்பு சட்டம் உபா, பண மோசடி தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ரத்து செய்யப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி :மக்களவை தேர்தலை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. தேர்தல் அறிக்கையில் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டமான உபா, பண மோசடி தடுப்பு சட்டம் ஆகிய கடுமையான சட்டப் பிரிவுகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதத்தில் இருந்து அரசியலை பிரிப்பது போன்ற கொள்கையை சமரசம் இல்லாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கடுமையான சட்டங்களான உபா மற்றும பணம் மோசடி தடுப்பு சட்டங்களை ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்கும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெறுப்பு பிரசார குற்றங்களுக்கு எதிரான சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிக்கவும், பொது சொத்து வரி மற்றும் பரம்பரை வரி குறித்த சட்டத்தை அறிமுகப்படுத்துவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.

மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு இரண்டு மடங்காக உயர்த்துவது மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்றுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 1ஆம் தேதி கடைசி மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

இதையும் படிங்க :அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஒ சாதனை! அமைச்சர் ராஜ்நாத் வாழ்த்து! - Agni Prime Missile Test Success

ABOUT THE AUTHOR

...view details