ETV Bharat / bharat

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி! டிஆர்டிஒ சாதனை! அமைச்சர் ராஜ்நாத் வாழ்த்து! - Agni Prime Missile test success

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 4, 2024, 4:13 PM IST

Agni-Prime: அக்னி பிரைம் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ மற்றும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதித்து பார்த்து உள்ளது. சோதனையில் ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஒ தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி பிரைம் ஏவுகணை சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. ஒடிசாவில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் நேற்று (ஏப்.3) இரவு 7 மணிக்கு அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சோதனையின் போது புதிய தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணை சீரிய வேகத்தில் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சோதனையின் போது முப்பைடைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், டிஆர்டிஒ அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றியை தொடர்ந்து டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஏவுகணையின் வெற்றிகரமான செயல்படுத்தப்பட்டதன் மூலம் இந்திய ஆயுதப் படைகளுக்கு சிறந்த பலத்தை பெருக்க முடியும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன அக்னி 5 ஏவுகணையை முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஒ வெற்றிகரமாக சோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்த தலைமுறைக்கான கண்டம் தாண்டி தாக்கும் அக்னி பிரைம் ஏவுகணயை டிஆர்டிஒ சோதித்து பார்த்து உள்ளது.

இதையும் படிங்க : தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 1.25 லட்சம் புகார்கள்! தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா? - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.