ஹைதராபாத்:தெலங்கானா சட்டப்பேரவையில் இன்று (பிப்.12) தெலங்கானா மாநிலத்தில் ஹூக்கா பார்லர் இயங்க தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. கண்ணாடி குவளைக்குள் போதைப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான உறிஞ்சு குழாயை உறிஞ்சினால், ஒரு விதமான போதை ஏற்படும். இதுவே ஹூக்கா எனப்படுகிறது.
ஹூக்கா என்ற போதைப்பொருளை பயன்படுத்துவதால் மூளை, நுறையீரல், இதயம் போன்ற முக்கிய உள்ளுறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட தெலங்கானா அரசு, ஹூக்கா பார்லர் இயங்க தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. இன்று சட்டப்பேரவை கூடியதும் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சார்பில், சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் டி.ஸ்ரீதர் பாபு, சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதாவின் நோக்கங்களை விளக்கினார்.
அதில் அவர், “ஹூக்கா இளம் தலைமுறையினருக்கு அதிக தீங்குகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, ஹூக்கா பார்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். குறிப்பாக கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் ஹூக்காவுக்கு வெகுவாக அடிமையாகி வருகின்றனர். ஹூக்கா புகைப்பது சிகரெட் புகைப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும். சுமார் 200 பஃப்ஸ் கொண்ட ஒரு மணி நேர ஹூக்கா, சிகரெட்டை விட 100 மடங்கு அதிக தீங்கு விளைவிக்கும்.