சாப்பிடும் முன் வழிபட்ட விஷால்… யோகிபாபு கொடுத்த ரியாக்சன் வைரல்!

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 18, 2024, 11:51 AM IST

thumbnail

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஹரி இயக்கும் ரத்னம் படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் ப்ரியா பவானி ஷங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரத்னம் படத்தின் அறிவிப்பு டீசர் கடந்த மாதம் வெளியானது. 

இந்நிலையில், ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர் 107வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் விஷால், இயக்குநர் ஹரி, ஒளிப்பதிவாளர் சுகுமார், நடன இயக்குநர் தினேஷ் மற்றும் படக் குழுவினர்கள் அனைவரும் எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  

அதனைத் தொடர்ந்து, படப்பிடிப்புத் தளத்தில் இருந்த அனைவருக்கும் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு, சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. இதில் விஷால் தனது பாணியில் சாப்பிடுவதற்கு முன் கடவுளை வழிபட்டார். அப்போது, அருகில் சாப்பிட்டு கொண்டிருந்த யோகி பாபு கொடுத்த ரியாக்ஷன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஷாலின் இந்த வழிபடும் முறையை நெட்டிசன்கள் மீம்ஸ்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.