kumbakarai falls:கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 2:11 PM IST

thumbnail

தேனி: பெரியகுளம் அருகே அமைமைந்துள்ளது கும்பக்கரை அருவி. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ளகெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை பெய்யாது போனதால் கடந்த சில நாட்களாக கும்பக்கரை அருவிக்கு வரும் நீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் மற்றும் இரவு நேரத்தில் அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கினர்.

ஆர்பரித்து கொட்டும் கும்பக்கரை அருவியின் நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வெப்பத்தின் தாக்கத்தை தனித்து செல்கின்றனர். நடப்பு ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து அருவியில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.