சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி கோர விபத்து.. நொடியில் பறிபோன உயிர்! பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 3:17 PM IST

thumbnail

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பண்ணப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சரக்கு வாகனம் ஒன்று தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று சரக்கு வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனம், சரக்கு வாகனத்தின் பின்பக்க சக்கரத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த தர்மபுரியைச் சேர்ந்த தனுஷ் (வயது 22) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய போலீசார், தனுஷின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.