வல்லநாடு மான்கள் சரணாலயத்தில் கொட்டப்படும் கழிவுகள்: நடவடிக்கை எடுக்க கோரும் சமூக ஆர்வலர்கள்!

By

Published : Jul 21, 2023, 10:17 PM IST

thumbnail

தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு மான்கள் சரணாலயம் அமைந்துள்ளது. மேல்புறம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் இருந்து கீழ்புறம் பேட்மாநகரம் வரை 14.6 சதுர கிலோ மீட்டர் பறந்து விரிந்து காணப்படும் இந்த சரணாலயம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

இந்த வனப்பகுதியில் கடந்த வருட கணக்கெடுப்பின்படி 243 வெளிமான்கள், 47 புள்ளிமான்கள், 30 கடமான்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி இங்கு முள்ளம் பன்றி, எறும்பு தின்னி, உடும்பு, மலைப்பாம்பு, கீரிப்பிள்ளை, குள்ளநரி, காட்டு முயல், மரநாய் உள்ளிட்ட 86 வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில் இந்த வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் இரவு நேரங்களில் கண்டெய்னர்கள் மூலம் டன் கணக்கில் கண்ணாடி கழிவுகள், பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கோப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் மண் வளம் பாதிக்கப்படுவதுடன் வனவிலங்குகளும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அதை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதையும் படிங்க: கொடைக்கானலில் சேலைகளால் வேலி அமைக்கும் விவசாயிகள்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.