தேனி கௌமாரியம்மன் கோயில் தேரோட்டம்..

By

Published : Jun 14, 2022, 11:16 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

thumbnail

தேனியில் பழமைவாய்ந்த சந்தை மாரியம்மன் என்று அழைக்கப்படும் கௌமாரி அம்மன் கோயில் தேரோட்டம் நேற்று (ஜூன்.13) வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் கௌமாரியம்மனுக்கு பட்டுடுத்தி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து வேதசாரியர்கள் புனித கலசத்தை ஆலயத்தில் இருந்து எடுத்துவரப்பட்டுத் தேர் மேல் எடுத்து செல்லப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரின் மேல் கலசத்தை வைத்தனர். பின்னர் கௌமாரி அம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க நாதஸ்வரம் வாசித்து பல்லக்கில் தூக்கி சென்று தேர் மீது அமரவைத்தனர். அதை தொடர்ந்து பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.