தஞ்சை பெரிய கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.40 லட்சம் வசூல்!

By

Published : Mar 4, 2023, 8:49 AM IST

thumbnail

தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு உள்ளூர், வெளியூர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

மேலும் உலகப் புகழ்பெற்ற இக்கோயில் கட்டிடக்கலையை பார்வையிடுவதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர். மேலும் இக்கோயிலில் நடைபெறும் பிரதோசம் போன்ற விழாக்கள் பிரசித்தி பெற்றது என்பதால் விழா காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காகவும், வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் நேர்த்தி கடனாக காணிக்கை செலுத்துவதற்காகவும் பல்வேறு இடங்களில் 11 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உண்டியல்கள் நிரம்பியதால் அவற்றை எண்ணும் பணி மார்ச் 3ந் தேதி காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் கவிதா, அனிதா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பணியில் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், இறையன்பர்கள் என 50க்கும் மேற்பட்டோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்னும் பணியை கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்தனர்.

இந்த உண்டியல்களில் மொத்தம் 40 லட்சத்து 6 ஆயிரத்து 472 ரூபாய் வசூல் ஆகி இருந்தது தெரிய வந்தது. எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை வங்கியில் செலுத்தப்பட்டது. மேலும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் மேற்பார்வையாளர்கள் ரெங்கராஜன், செந்தில் உள்ளிட்டோரும் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாத அண்ணாமலையின் பேச்சு அரைவேக்காடு பேச்சாக உள்ளது - அமைச்சர் மஸ்தான்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.