சென்னை - மங்களூர் பயணிகள் ரயிலில் திடீர் புகை.. அலறியடித்து ஓடிய பயணிகள்.. வேலூரில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 9:03 PM IST

thumbnail

வேலூர்: சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் (weat coast express) காட்பாடி அடுத்த லத்தேரி ரயில்வே நிலையம் கடந்து சென்ற போது, ரயிலில் திடீரென புகை வந்துள்ளது. அதைக்கண்ட அப்பகுதி மக்கள் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனே ரயில்வே அதிகாரிகள் ரயிலை இயக்கிய ஓட்டுநருக்கு தகவல் கொடுக்கவே, ரயிலானது நிறுத்தப்பட்டுள்ளது. 

அதைத் தொடர்ந்து, இஞ்சின் பின்புறம் இருக்கக்கூடிய பயணிகள் பெட்டியின் கீழ் பகுதியில் புகை வருவதைக் கண்டு அதிகாரிகள் சென்று பார்த்தபோது தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே அந்த தீயை அணைத்த ரயில்வே ஊழியர்கள், "இந்த தீ ரயில் சக்கரமும், ரயிலில் இருக்கக்கூடிய பிரேக் இயந்திரமும் உராய்வதின் காரணமாக ஏற்படும். இதனால் பெரிய அளவிற்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது" என்று தெரிவித்தனர். 

மேலும், ரயிலில் புகை வருவதைக் கண்ட ரயில் பயணிகள், ரயிலை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ரயில்வே ஊழியர்கள் சக்கரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்த 20 நிமிடத்திற்கு பிறகு, ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.