Lal Salaam: திருவண்ணாமலையில் 'லால் சலாம்' படப்பிடிப்பு; ரஜினிகாந்த் பங்கேற்பு!

By

Published : Jun 27, 2023, 8:10 PM IST

thumbnail

திருவண்ணாமலை: நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படப்பிடிப்பு திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பில் பங்கேற்க வந்துள்ள நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அருகே உள்ள பிரபல தனியார் கல்லூரியில் தங்கியுள்ளார். படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் நேற்று முன்தினம் (ஜூன் 25) திருவண்ணாமலைக்குச் சென்றார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடியில் உள்ள பண்ணை வீட்டில் 'லால் சலாம்' படப்பிடிப்பு நேற்று (ஜூன் 26) பிற்பகலில் நடைபெற்றது. அப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையறிந்த ரசிகர்கள் படப்பிடிப்பு நடைபெறும் பகுதி முன்பு திரண்டனர். அவர்களை கூட்டம் கூட வேண்டாம் என கூறி தனியார் பாதுகாவலர்கள் திருப்பி அனுப்பினர். 

திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்புக்காக, திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் 3 நாட்கள் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்புக்கு இடையே, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்யலாம் என கூறப்படுகிறது.

இதனையொட்டி அந்தப் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். மேலும், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை - வேலுர் சாலையில் படப்பிடிப்பு நடைபெற்ற பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு: நீதிமன்றத்தில் அனல் பறந்த இருதரப்பு வாதம்!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.