களைகட்டிய புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை.. 5 மணி நேரத்தில் ரூ.1 கோடிக்கு விற்பனை

By

Published : May 18, 2023, 11:31 AM IST

thumbnail

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று கூடுகிறது. ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள இந்தச் சந்தைக்கு, மாநிலத்தின் பல்வேறு மாவட்டகளில் இருந்தும் கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வாங்க, விற்க வருகின்றனர். 

அந்த வகையில் வியாழக்கிழமையான இன்று (மே 18) கூடிய சந்தைக்கு 50 எருமைகள், 200 கலப்பின மாடுகள், 110 கன்றுகள், 200 ஜெர்சி ரக மாடுகள் விற்பனைக்கு வந்தன. அதில், எருமைகள் 18 முதல் 35 ஆயிரம் ரூபாய், ஜெர்சி 22 ஆயிரம் முதல் 48 ஆயிரம் ரூபாய், சிந்து 16 ஆயிரம் முதல் 42 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு 72 ஆயிரம் ரூபாய், வளர்ப்பு கன்றுகள் 6 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. 

200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில், 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ஒன்று 7 ஆயிரம் ரூபாய் வரையும், 10 கிலோ வரையுள்ள செம்மறி ஆடுகள் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையும் விற்பனையானது. அதிகாலை 4 மணிக்குச் சந்தை தொடங்கிய நிலையில், சந்தைக்கு கொண்டு வரப்பட்ட அனைத்து கால்நடைகளும் 5 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்வரை விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.