Srirangam: திருச்சி ஶ்ரீரங்கம் கோயில் உண்டியலில் வருவாய் எவ்வளவு தெரியுமா?

By

Published : Jun 27, 2023, 9:48 PM IST

thumbnail

திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருத்தலமாகும். இந்த ஶ்ரீரங்கம் கோயிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களில் இருந்து பக்தர்கள் ஆண்டுதோறும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் பணம் மற்றும் நகைகள் ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு பணங்கள் என தங்களால் இயன்றதை காணிக்கையாக அளித்து வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களால் செலுத்தப்பட்ட உண்டியல் காணிக்கைகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தலைமையில் இன்று (ஜூன் 27) திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் வைத்து காணிக்கை எண்ணப்பட்டது.

இதில் திருக்கோயில் உதவி ஆணையர் ரவி சந்திரன்‌ மற்றும் மேலாளர் தமிழ்செல்வி, துணை மேலாளர் சண்முக வடிவு, ஆய்வாளர் மங்கையர்கரசி, அறநிலைய துறை ஊழியர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கமாக 77 லட்சத்து 38 ஆயிரத்து 183 ரூபாயும், 216.6 கிராம் தங்கம், 1870.900 கிராம் வெள்ளி மற்றும் 261 வெளிநாட்டு ரூபாய் தாள்களும் கிடைக்கப் பெற்றதாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:5 வந்தே பாரத் ரயில் சேவைகள்... கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.