வத்தலக்குண்டில் இசைப்போட்டி.. ஆர்வமுடன் பங்கேற்ற ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 9:53 AM IST

thumbnail

திண்டுக்கல்: கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாகவும், பழமையான நினைவுகளையும், கலாச்சார பாடல்களையும் பறைசாற்றும் வகையிலும் வத்தலக்குண்டு அருகே மாபெரும் இசைப் போட்டி திருவிழா நேற்று (டிச.02) நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே விராலி மாயன்பட்டி கிராமத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை கொண்டாடும் விதமாக, வத்தலக்குண்டு ஒன்றிய திமுக மற்றும் வட்டார ஒலிபெருக்கி உரிமையாளர் நல சங்கம் சார்பில், மாபெரும் இசைப் போட்டி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஒலி அளவு கட்டுப்பாட்டுகளுடன் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஒலிப்பெருக்கி உரிமையாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், பழங்கால அரக்கு ரெக்கார்டுகளில் தொடங்கி ஆடியோ கேசட் (Audio Cassette), சிடி பிளேயர் (CD Player) உட்பட தற்போது உள்ள பென் டிரைவ் (Pen Drive) வரை அனைத்து உபகரணங்களை கொண்டும் இசை போட்டிகள் நடைபெற்றன. இங்கு நடைபெறும் போட்டிகளை காண வத்தலக்குண்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இசை ஆர்வலர்கள் திரண்டு வந்திருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.