முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஆவடி சிறுமிக்கு புது வீடு - அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி!

By

Published : Aug 16, 2023, 6:00 PM IST

thumbnail

சென்னை: ஆவடி அடுத்த மோரை பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன்-செளபாக்கியா தம்பதியின் மகள், டான்யா. இவர் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, தற்போது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு வீடு கட்டி தருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பாக்கம் கிராமத்தில் 3 சென்ட் நிலத்தை அவரது பேரில் பதிவு செய்யப்பட்டு, வீடு கட்டுவதற்கான பணியை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் நாசர் மற்றும் கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.

மேலும், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வீடு கட்ட திட்ட மதிப்பீடுகளை அளிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சிறுமி டான்யா, தனக்கு ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இதுவரை தொடர்ந்து கண்காணித்து உதவி வரும் முதலமைச்சர், அமைச்சர் காந்தி, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நன்றி என கூறினார்.

தொடர்ந்து இது குறித்து பேசிய டான்யாவின் பெற்றோர், வாக்குறுதிகளை அளித்தது மட்டுமல்லாமல் தொடர்ந்து தமிழக முதல்வர் உதவிகளை செய்து வருவதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றியினைத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.