மகாராஷ்டிரா-மத்தியப் பிரதேச மாநில எல்லையில் பயங்கர விபத்து - பலர் உயிரிழப்பு!

By

Published : Jul 4, 2023, 3:29 PM IST

Updated : Jul 4, 2023, 3:51 PM IST

thumbnail

மகாராஷ்டிரா: துலே மாவட்டம், மத்தியப் பிரதேச மாநில எல்லையில் உள்ள மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 26 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஷிர்பூர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நான்கைந்து வாகனங்களுக்கு இடையில் ஒன்றுடன் ஒன்று சிக்கி, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். நர்தானா எம்ஐடிசியில் இருந்து, வொண்டர் சிமெண்டிற்கு சரளை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து  முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது. 

மோதிய வேகத்தில் அருகிலுள்ள நான்கு இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதியுள்ளது. மேலும், அந்த கன்டெய்னர் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய ஹோட்டலுக்குள்ளும் நுழைந்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் உதவி மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்த விபத்து நடந்த இடத்தில் கொட்டப்பட்ட சரளைகளை, அப்புறப்படுத்தி நெடுஞ்சாலையை சீரமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்டெய்னர் மோதி விபத்துக்குள்ளான காரில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் இருந்துள்ளனர். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவன், இரண்டு குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Last Updated : Jul 4, 2023, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.