பாஜகவுடன் கூட்டணி வைத்தால் பின்னடைவுதான் - கார்த்தி சிதம்பரம்

By

Published : Mar 19, 2023, 5:44 PM IST

thumbnail

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் நற்சாந்துபட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், “நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது கண்டணத்திற்கு உரியது.‌ தமிழ்நாட்டில் பாஜக உடன் யார் கூட்டணி வைத்தாலும், அவர்கள் பின்னடைவைத்தான் சந்திப்பார்கள்” என கூறினார். முன்னதாக கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கியபோது பயனாளிகளிடம், முதல் பிரசவத்தை பற்றி அவர் விசாரித்தார். அப்போது பெரும்பாலானோர் அறுவை சிகிச்சை செய்து பிரசவித்ததாக தெரிவித்தனர். 

எனவே அறுவை சிகிச்சையைக் குறைத்து, சுகப் பிரசவத்தை அதிகரிக்குமாறு மருத்துவர்களிடம் கார்த்தி சிதம்பரம் அறிவுறுத்தினார். முன்னதாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2வது அமர்வில், ராகுல் காந்தி பிரிட்டனில் ஜனநாயகம் பற்றி சர்ச்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தரப்பும், அதானி முறைகேடு தொடர்பான விவகாரத்தில் கவுதம் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விளக்குமாறு காங்கிரஸ் தரப்பும் கேள்வி எழுப்பி வருவதால், அவை முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.