கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம்.. 10 ஆயிரம் காகித துண்டுகளில் உருவாக்கி ஐடி ஊழியர் அசத்தல்!

By

Published : Jun 4, 2023, 1:58 PM IST

thumbnail

கிருஷ்ணகிரி: ஓசூர் சின்ன எலசகிரி பகுதியைச் சேர்ந்தவர் ஐ.டி நிறுவன ஊழியர், லுாகாஸ் (வயது 33). இவர் பெங்களூர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். திருக்குறள் மற்றும் தமிழ் மீது பற்றுள்ள இவர், ஏற்கனவே ஐஸ் குச்சிகளில் தனித்தனியாக 1,330 திருக்குறள்களை எழுதியும், வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு 5000 காகித துண்டுகளால் அவரது உருவத்தை வரைந்தும் சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 10 ஆயிரம் காகித துண்டுகள் மூலம் 100 ரூபாய் நாணயத்தில் கருணாநிதி உருவம் இடம் பெற்றுள்ளது போல், மொசைக் ஆர்ட்டை லூகஸ் உருவாக்கி உள்ளார். இந்த மொசைக் ஆர்ட்டின் கீழ்ப் பகுதியில் கருணாநிதி கூறிய ‘இமய மலைக்கு பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லவா’ என்கிற வரிகளை எழுதிக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து லூகஸ் கூறுகையில், மறைந்த முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு பிறந்த நாளுக்காக 100 ரூபாய் நாணய மொசைக் ஆர்ட்டை உருவாக்கினேன். இதற்கு, 10 ஆயிரம் பேப்பர் துண்டுகள் தேவைப்பட்டன. எனது அன்றாட பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் போது, இந்த மொசைக் ஆர்ட்டை இரு மாதங்களில் செய்து முடித்தேன். இன்னும் பல சாதனைகளைப் படைப்பேன்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காளையார் கோயில் பாண்டியன் கோட்டையில் பானை ஓட்டு கீறல், குறியீடுகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.