Then Pennai River: பனிக்கட்டிகள் போல் நுரை.. துர்நாற்றத்துடன் வெளியேறூம் தென்பெண்ணை தண்ணீர்!

By

Published : Jun 2, 2023, 1:51 PM IST

thumbnail

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு விநாடிக்கு 750 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. 

கர்நாடகா மாநிலம் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகும் நந்திமலை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழை காரணமாக அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.கெலவரப்பள்ளி அணையின் முழுக் கொள்ளளவான 44.28அ டிகளில் 41.66 அடிகள் நீர் சேமிக்கப்பட்டு உள்ளது. 

அணைக்கு நேற்று (ஜூன் 1) விநாடிக்கு 519 கனஅடியாக இருந்த நிலையில் இன்று (ஜூன் 2) விநாடிக்கு 750 கன அடியாக உயர்ந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றில் 640 கன அடிநீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றில் அதிகப்படியான நுரை வர ஆரம்பித்துள்ளது. மேலும் இந்த நுரைகள் பனிக்கட்டி போல் ஆற்றில் அடித்து செல்வதை காண் முடிகிறது.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளாக பணிபுரிந்த பேருந்தை பிரிய முடியாமல் கதறி அழுத ஓட்டுநர்! 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.