திருமண நிகழ்ச்சியில் நடனமாடிய இளைஞர் மாரடைப்பால் திடீர் மரணம்

By

Published : Jun 18, 2023, 8:02 AM IST

thumbnail

எட்டா(உத்தரப் பிரதேசம்): முன்பை காட்டிலும் மாரடைப்பு நோய் ஏற்படும் விகிதம் அதிகரித்து இருக்கிறதை நம்மால் காண முடிகிறது. அதுவும் முக்கியமாக கரோனா காலகட்டத்துக்குப் பிறகு அதன் தாக்கம் இன்னும் கூடுதல். மேலும் இதில் அதிகம் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று புள்ளி விவரத்தின் மூலம் அறியமுடிகிறது. அதில் சிலர் நடனமாடும்போது அல்லது திடீரென மாரடைப்பால் இறந்தனர். கடந்த சில காலங்களில், இது போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களிலிருந்து வெளிவந்தன. 

இப்போது உத்தரப்பிரதேசத்தின் ஷாஜஹான்பூரில் இருந்து அத்தகைய வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது, அதில் மணமகனின் சகோதரர் நடனமாடும் போது மாரடைப்பால் இறந்து போகும் காட்சி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருவதாக இருக்கின்றது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்டம், மொஹல்லா கர்ஹி வைஷ்யனைச் சேர்ந்தவர், சஞ்சு. இவர் தனது சகோதரனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்தார்.  இந்த திருமண ஊர்வலமானது ஷாஜஹான்பூரில் உள்ள கோகுல்புரா கலன் என்ற இடத்திற்குச் சென்றது. திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆடியது வீடியோவில் தெரிகிறது. அதில் சஞ்சுவும் எல்லோருடன் நடனமாடி இருக்கிறார். அப்போது நடனமாடி கொண்டிருந்த அவர் தரையில் திடீரென படுத்துக்கொண்டார். நடிக்கிறார் என்று பலரும் நினைத்திருக்க, வெகு நேரம் ஆகியும் அவர் எழுந்திருக்கவில்லை. பின்பு அங்கு இருந்த பாரதி என்பவர் சென்று எழுப்ப முயற்சி செய்ய, அவரது உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை. 

அதன் பின்பு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பார்க்கையில் அவர் இறந்து போனது மருத்துவர் மூலம் அவரது உறவினர்களுக்குத் தெரிய வந்தது. இந்த செய்தியைக் கேட்ட உறவினர்கள் ஆழ்ந்த துக்கத்துக்கு உள்ளானார்கள். பின்பு அவரது உடல் சொந்த ஊரான ராம்புருகே கொண்டு செல்லப்பட்டது.

இதையும் படிங்க: இணையத்தை கலக்கும் Shy Girl workout: அப்படியென்ன சிறப்பு?

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.