இலங்கை யாழ்ப்பாணத்தில் ராட்சத பட்ட திருவிழா.. ஏராளமானோர் பங்கேற்பு!

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 15, 2024, 10:59 PM IST

thumbnail

யாழ்ப்பாணம்: தமிழர் திருநாளான தைத் பொங்கல் தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. தொடர்ந்து பொங்கலை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. 

அந்த வகையில், இலக்கை யாழ்ப்பாணத்தில் தமிழர் திருநாளான தைத் பொங்கல் தினத்தை முன்னிட்டு ராட்சத விசித்திர (உருவங்களில்) பட்ட திருவிழா இன்று (ஜன.15) நடைபெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனைப் போட்டியாளர்கள் பறக்க விட்டனர். 

இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு விதமான ராட்சத பட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த வண்ண பட்டங்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த திருவிழாவைக் காண இலங்கையின் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். 

மேலும், இந்த பட்ட திருவிழாவானது ஆண்டுதோறும் தைத் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.