'ஒரு சின்ன தாமரை' கிரிவலப் பாதையில் லவ் சாங்.. திருவண்ணாமலை பக்தர்கள் ஷாக்!

By

Published : Mar 6, 2023, 9:35 AM IST

thumbnail

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று நடக்கும் கிரிவலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் அண்ணாமலையார் தரிசித்து கிரிவலம் மேற்கொள்வார்கள். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாட்டினரும் கிரிவலத்தில் பங்கேற்று சாமி தரிசனம் செய்வர்.

அவ்வாறு கிரிவலம் செல்லும் பக்தர்கள் களைப்படையாமல் இறைச் சிந்தனையில் வலம் வருவதற்கு ஏதுவாக 14 கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த கிரிவலப் பாதையில் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டு அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஓம் நமச்சிவாய என்ற வேத மந்திரம் ஒலிபரப்பப்பட்டது வந்தது. இந்நிலையில் இன்று மாசி மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலப் பாதையில் உள்ள ஒலிபெருக்கியில் வேத மந்திரத்துக்குப் பதிலாக சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டது வந்தது.

இச்சம்பவம் கிரிவலம் செல்லும் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த நிகழ்வுக்குக் காரணமாக உள்ள நபர்களின் மீது திருக்கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: தொடரும் பட்டாசு ஆலை வெடி விபத்துகள்! கடலூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பெண் பலி!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.