ஈரோடு அருகே மதுபோதையில் ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட கும்பல்.. ஊழியரை சரமாரியாக தாக்கும் வீடியோ வைரல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 12:43 PM IST

thumbnail

ஈரோடு: தனியார் உணவகத்திற்குள் மதுபோதையில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், உணவக ஊழியரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் மூலப்பாளையத்தைச் சேர்ந்த தனசங்கர் என்பவர், சூரம்பட்டி நால்ரோடு அருகில் புரோட்டா உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், உணவகத்தில் அமர்ந்து சாப்பிட வேண்டும் எனக் கூறி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, உணவக காசாளரான சேது என்பவர், நேரமின்மை காரணமாக பார்சல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்ததால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் சேதுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்கிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தாக்குதல் நடத்திய கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.